சொந்த ஊரு செண்டிமெண்ட் - நூறு சாமி பார்த்து நெகிழ்ந்த முருகதாஸ்
பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நூறு சாமி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கிராமப்புற கதையை பேசும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஸ்வாஷிகா நடித்திருக்கிறார் .
இந்தப் படம் வருகிற 19ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த பல நட்சத்திர பிரபலங்கள் இயக்குனர்கள் தொடர்ச்சியாக பாடத்தை குறித்து பாசிட்டிவான விமர்சனத்தை தெரிவித்தார்கள். முன்னதாக இயக்குனர் ஹெச் வினோத் இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் நூறு சாமி அற்புதமாக இருக்கிறது.

எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என கூறி இருந்தார். தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நூறு சாமி திரைப்படம் நிச்சயம் உங்கள் மனதில் நிற்கும் மனதை தொடும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் கள்ளக்குறிச்சி அருகில் நடந்த ஒரு நிஜமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்து இருக்காங்க. அதனால் எனக்கு இந்த படம் இன்னும் ஸ்பெஷலாக இருந்தது. படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்டிப்பா ரசிகர்களும் இந்த படத்தை விரும்புவார்கள் என்று ஏ ஆர் முருகதாஸ் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
