என் படத்தை ஓட வச்சதே நீ தான்மா - அந்த நடிகைக்கு நன்றிக்கடன் பட்ட மிஷ்கின்!

 
director mysskin

இயக்குனர் மிஷ்கின்: 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான மிஸ்கின் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.  முதல் திரைப்படமே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்ததோடு ஃபிலிம் பேர் விருதை பெற்றிருந்தது.

myskin

மிஷ்கின் திரைப்படங்கள்:

தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட மிகவும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் கதையை இயக்கி வெற்றியை கொடுத்தவர். இந்த நிலையில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இடம் பெற்ற வால மீனுக்கு விளங்க மீனுக்கும்  எனும் பாடல் அத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. 

மாளவிகாவிற்கு நன்றி:

malavika

அந்த பாடலில் நடிகை மாளவிகா குத்தாட்டம் போட்டு நடனமாடிருப்பார். இதனை சமீபத்திய திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேடை ஏறி பேசிய மிஷ்கின் அங்கே கீழ் அருகில் அமர்ந்திருந்த நடிகை மாளவிகாவை பார்த்து... நீங்கள் தான் என்னுடைய படத்தை வெற்றி பெறச் செய்ததே. உங்களுக்கு மிக்க நன்றி எனக் கூறி வால மீனுக்கும் விளங்கு மீனுக்கும் எனும் பாடலுக்கு நடனம் ஆடி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Tags

From Around the web