×

பிரபல நடிகையிடம் 70 வருஷம் கால்ஷீட் கேட்ட இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர், நடிகை ஒருவரிடம் எழுபது வருடங்கள் கால்சீட் கேட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

கோலிவுட் திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் உள்ளனர் என்பது தெரியும். அந்த ஜோடிகளில் ஒரு ஜோடி இயக்குனர் பொன்வண்ணன் மற்றும் நடிகை சரண்யா ஆகியோர்களும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

கமல்ஹாசனின் ’நாயகன்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சரண்யா. இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் அழகான அம்மா இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் பொன்வண்ணன், தற்போது முழு நேர நடிகராக மாறிவிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சரண்யா அளித்த ஒரு பேட்டியில் பொன்வண்ணன் தன்னிடம் காதலை புரபோஸ் செய்தது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பொன்வண்ணன் அவர்கள் தன்னிடம் போன் செய்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்திற்கு உங்களுடைய கால்ஷீட் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார். அதற்கு சரண்யா எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டபோது 70 வருடங்கள் கால்ஷீட் வேண்டும் என அவர் கேட்டதாக கூறினார். அந்த பதிலை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதன்பின்னர்தான் அவர் தனது காதலை வித்தியாசமாக போஸ் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டதாகவும் கூறினார்

மேலும் காதலிக்கும் நேரத்தில் ஒரு முறை கூட அவர் தன்னிஅம் சிரித்து பேசியதில்லை என்றும் சிடுசிடு என்றே இருப்பார் என்றும் ஆனால் கல்யாணத்திற்குப் பின் அப்படியே மாறி தன்னிடம் அன்பு மழை பொழிந்ததாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சரண்யா பொன்வண்ணனின் மலரும் காதல் நினைவுகள் குறித்த இந்த பேட்டி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News