×

அதென்னங்க அழகு... டிவிட்டர் போஸ்டால் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

இயக்குனர் பார்த்திபன், தனது சமீபத்திய டிவிட்டர் போஸ்டால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 
 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான பார்த்திபன், குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாது அவ்வப்ப்போது வில்லனாகவும் மிரட்டுவார். இவர் தனியொரு ஆளாக நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு படம் பரவலாகக் கவனம் பெற்றது. இந்தநிலையில், இரவின் நிழல் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க பார்த்திபன் திட்டமிட்டிருக்கிறார். ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படம் ஆசியாவிலேயே இப்படி எடுக்கப்படும் முதல் படம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஸ்கிரிப்ட் வேலைகளை பார்த்திபன் ஏற்கனவே முடித்திருக்கிறார். 


இந்தநிலையில், படத்தில் நடிப்பதற்காக இரண்டு நடிகைகள் மற்றும் நடிகர்கள் தேவை என பார்த்திபன் டிவிட்டர் மூலம் அறிவிப்பு விடுத்துள்ளார். அதில், ஒரு நடிகை 16 முதல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுவிட்டு, தென்னிந்திய முகஜாடையுடன் மிகவும் அழகாக நல்ல நிறத்துடன் இருக்க வேண்டும் என்ற பொருளில் `Fair South Indian look' என பார்த்திபன் சுட்டிக்காட்டியிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. `அதென்னங்க கலரா இருந்தாதான் ஹீரோயினா... மாநிறமா நல்ல நடிக்கக் கூடிய திறமை இருக்கவங்க ஹீரோயினா நடிக்கக் கூடாதா?’ என சகட்டுமேனிக்கு நெட்டிசன்கள் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மேலும், 50 வயதான பிராமண லுக்குடன் ஒருவரும் முஸ்லிம் லுக்குடன் ஒருவரும் வேண்டும் எனவும் பார்த்திபன் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருப்பது இனரீதியாக விமர்சனங்களை எதிர்க்கொண்டிருக்கிறது.`அதென்னங்க பிராமின் லுக், முஸ்லிம் லுக்?’ என்றும் பார்த்திபனுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News