Categories: Cinema News latest news

மக்களை நம்பி வர வேண்டாம்.. மக்கள் இவர நம்பனும்! அதுக்கு விஜய் இத பண்ணனும் – பேரரசு சொன்ன விஷயம்

Actor Vijay: நடிகர் விஜய் என்று போய் தலைவர் விஜயாக மாறியிருக்கிறார் நம்முடைய தளபதி விஜய். சமீபகாலமாக விஜயை பற்றிய செய்திகள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுவும் அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் என்று சொன்னதில் இருந்து எங்கு திரும்பினாலும் விஜய் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்து விட்டு அடுத்ததாக முழு மூச்சில் அரசியலில் தன் கவனத்தை செலுத்தப் போவதாகவும் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் விஜய் கூறியிருக்கிறார். அதுவும் மிகப்பெரிய பீக்கில் இருக்கும் போதே விஜய் அரசியலுக்குள் வருகிறார் என்றால் ஏதோ ஒரு கொள்கையுடன்தான் வருகிறார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் கனிகா!.. போட்டோஸ் ஒவ்வொன்னும் அள்ளுது!..

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு விஜயின் அரசியல் குறித்த சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். விஜயை ஒரு சிறந்த நடிகராக்கிய திரைப்படங்களை கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர் இயக்குனர் பேரரசு. இன்று ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது: ‘எம்ஜிஆர் , விஜயகாந்தை போன்று விஜயும் நேரிடையாக மக்களை சந்திக்க வேண்டும்.இதுவரை அவர் அவரது ரசிகர்களை மட்டுமே சந்தித்து வந்தார்.’

‘பிறந்த நாள் என்றால் ரசிகர்களை அழைத்து போட்டோ எடுத்து இதே ஒரு பழக்கத்தைத்தான் வைத்திருந்தார். ஆனால் எம்ஜிஆர் , கேப்டன் இருவரும் மக்களை போய் சந்தித்தார்கள். தன் படங்களின் மூலம் தங்கள் கொள்கைகள் என்ன என்பதை உணர்த்தினார்கள். இருவரின் படங்கள் பெரும்பாலும் விவசாயம் ,ஊழலுக்கு எதிராக குற்றத்தை தட்டிக் கேட்பது, போன்ற சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துக் காட்டும் படங்களாகத்தான் இருக்கும்.’

இதையும் படிங்க: மூன்று முடிச்சு படத்தில் ரஜினி சொன்ன பொய்… குருநாதருக்காக உயிரை விட துணிந்த ஆச்சரியம்…

ஆனால் விஜயின் படங்களே வேறு. அதனால் இனிமேல் ரசிகர்களை அழைத்து பார்ப்பதை விட இவரே நேரிடையாக மக்களை போய் களத்தில் சந்திக்க வேண்டும். நிறைய எதிர்ப்புகள் வரும். அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு சிறந்த தலைவராக உருவெடுக்க வேண்டும். மக்களும் தங்களை தேடி வரும் தலைவர்களைத்தான் விரும்புவார்கள். மேலும் ஊழல் இல்லாத அரசியல் என விஜய் சொல்லியிருக்கிறார்.

அப்படி அமைந்தால் அவரை விட சிறந்த தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் விஜயின் அரசியல் கொள்கைகளை என பேரரசு கூறினார். சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நமக்கு ஆதரவாக ஏராளமானோர் இருப்பார்கள் என மக்களை நம்பி அரசியலுக்கு வர வேண்டாம். மக்கள் விஜயை நம்ப வேண்டும். அதற்கு விஜய் மக்களுக்கு பிடித்தார் போல இருக்க வேண்டும் என்றும் பேரரசு கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த ராஜமவுலி நான்தான்டா!.. மார்க்கெட் போன பின்னாடி மகாபாரதம் எடுக்கும் லிங்குசாமி!…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini