விஜய் மீண்டும் நடிக்க வரணும்!.. அவரோட கனவு நனவாகலைன்னா!.. ஃபேவரைட் டைரக்டர் கோரிக்கை!..

 

நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என 2 வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு விஜய் மீண்டும் நடிக்க வரவேண்டும் என பேசியுள்ளார். இந்த வாரம் அஜித் - ஷாலினியின் திருமண நாளை முன்னிட்டு அமர்க்களம் திரைப்படம் வெளியானது.

அந்த படத்துக்குப் போட்டியாக விஜய், அசின், பிரகாஷ் ராஜ் நடித்த சிவகாசி படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். தேர்தல் பிசியில் ரசிகர்கள் இந்த வாரம் பெரிதாக தியேட்டர் பக்கமெல்லாம் போகவே இல்லை. அதனால், 2 படங்களும் பெரிதாக வசூல் அள்ளவில்லை என்கின்றனர்.

விஜய் மீண்டும் நடிக்க வரணும்!.. அவரோட கனவு நனவாகலைன்னா!.. ஃபேவரைட் டைரக்டர் கோரிக்கை!..

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பேரரசு, விஜய் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுவிட்டால் அவர் அரசியலில் தொடரட்டும். ஆனால், ஒருவேளை அவரது கனவு நனவாகவில்லை என்றால் மீண்டும் நடிக்க வரவேண்டும்.

அரசியலில் விஜய்க்கு இவ்வளவு மக்கள் அவர் சென்ற இடத்துக்கெல்லாம் ஆதரவு கொடுக்க காரணமே அவரது சினிமா வாழ்க்கையும் அவர் நடித்த படங்களும் தான். அந்த ரசிகர்களை அவர் எப்போதுமே கைவிட்டு விடக் கூடாது என பேரரசு பேசியுள்ளார்.

அரசியலுக்கு வந்த பிறகும் கமல்ஹாசன், பவன் கல்யாண், சீமான் உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். விஜய்யும் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் தொடர வேண்டும் என்றும் ஜன நாயகன் படம் லீக் ஆன நிலையில், கேவிஎன் நிறுவனத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தர வேண்டும் என்றும் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

From Around the web