விஜயகாந்தின் அந்தப் படத்தில் வடிவேலு வந்தது இப்படித்தான்! இவ்ளோ போராட்டம் நடந்துச்சா?
விஜயகாந்த்:
தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர். விஜயகாந்தை பொருத்தவரைக்கும் நல்ல மனிதாபிமானமுள்ள நடிகர் என்பதையும் தாண்டி அவரைப் பற்றி இன்னும் தெரியாத பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எந்த ஒரு பெரிய நடிகரும் தன்னுடைய படம் ஃப்ளாப் ஆகிவிட்டால் அந்த படத்தின் இயக்குநரையோ தயாரிப்பாளரையோ அடுத்து கண்டுக்கவே மாட்டார்கள். ஆனால் விஜயகாந்தை பொறுத்த வரைக்கும் அந்தப் படம் பிளாப்போ இல்லையோ வெற்றியோ தோல்வியோ தன் படத்தின் இயக்குனருக்கு எப்போதுமே நன்றி கடன் பட்டவராக தான் இருப்பார்.
தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்களை அவர் இருக்கும் வரை என்னுடைய இயக்குனர் என்று தான் அழைத்து வந்தார். அதற்கு ஒரு உதாரணம் எஸ் ஏ சந்திரசேகர். அவரைப் பற்றி பேசும் போதெல்லாம் விஜயகாந்த் என்னுடைய இயக்குனர் என்று தான் சொல்லி அழைப்பார். இது அனைவருக்குமே தெரியும். பார்த்தவுடன் நெடுநாள் பழகிய முகம் கொண்ட மனிதர் போல யாரிடமும் சகஜமாக பழகி விடுபவர் விஜயகாந்த். அண்ணனுக்கு அண்ணனாக அப்பாவுக்கு அப்பாவாக தோழனுக்கு தோளாக என அவருடன் பழகியவர்கள் விஜயகாந்த் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
தர்மபுரி படம்:
அதில் இயக்குனர் பேரரசு விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை கூறி இருக்கிறார். சிவகாசி ,திருப்பாச்சி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியவர் பேரரசு. இவர் விஜயகாந்த் நடித்த வல்லரசு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக விஜயகாந்தை வைத்து தர்மபுரி என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு பேரரசுக்கு கிடைத்திருக்கிறது.
எந்த ஒரு நடிகராக இருந்தாலும் அதுவும் சினிமாவில் ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகராக இருக்கும் பட்சத்தில் உதவி இயக்குனர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பை கொடுக்க மாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகில் 52 உதவி இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்படித்தான் தர்மபுரி படத்தை இயக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அந்த படத்தின் கதையும் பிடித்துப் போக அதில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தின் கேரக்டரை நான் அவரிடம் சொல்லும் போது விஜயகாந்துடன் அந்த படம் முழுக்க இந்த கதாபாத்திரம் ட்ராவல் செய்யும்.
பேரரசுவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி:
நான் கதை சொல்ல சொல்ல விஜயகாந்த் மனதில் வடிவேலு பதிந்து விட்டார். உடனே அந்த படத்தின் தயாரிப்பாளரான ஏ எம் ரத்தினத்திடமும் விஜயகாந்த் இந்த படத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்ல பேரரசுவுக்கே தெரியாமல் ஏ எம் ரத்தினம் வடிவேலுவிடம் போய் பேசி கால்சீட்டும் வாங்கி விட்டாராம். இதை பேரரசுவிடம் சொல்ல பேரரசுவுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அந்த நேரத்தில் வடிவேலுவும் மிகவும் பிசியான நடிகராக இருந்திருக்கிறார்.
பேரரசுவை பொறுத்த வரைக்கும் இந்த தர்மபுரி படத்தை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு விஜயகாந்த் அரசியலுக்கு எண்டிரி ஆகிறார். அதனால் அவர் அரசியலுக்கு போவதற்கு முன் எப்படியாவது இந்த படத்தை ரிலீஸ் செய்த விட வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என எண்ணி இருக்கிறார்.
அதனால் வடிவேலு இந்த படத்தில் முடிக்க முடியாது. ஏனெனில் படம் முழுக்க அவர் ட்ராவல் செய்யவேண்டும். விஜயகாந்த் கால்ஷீட் எவ்வளவோ அதே மாதிரி வடிவேலுவும் கால்ஷீட் கொடுக்க வேண்டும். அது அவரால் முடியாது என பேரரசு நினைத்திருக்கிறார். ஆனால் வடிவேலுவிடம் பேசி கால்சீட் எல்லாம் வாங்கி இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம்.