இனியாவது தமிழர் ஆளட்டும்.. ரஜினி விட்டுக்கொடுத்தார். - பிரபல இயக்குனர் டிவிட்...

நடிகர் ரஜினி வருகிற 31ம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சுந்தர பாண்டியன், சத்ரியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபாகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இன்று உங்களின் அறிவிப்பால்" இந்த மண்ணை இனியாவது ஒரு தமிழரே ஆளட்டும்" என விட்டு கொடுத்ததற்காகவும், நல்ல உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இன்னும் நிறைய படங்கள் நடிக்க முடிவெடுத்ததற்காகவும்
உங்களின் தீவிர ரசிகனாக, அகம் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த டிவிட் ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு @rajinikanth sir,
— SR_Prabhakaran offi (@DirSRP_Official) December 29, 2020
இன்று உங்களின் அறிவிப்பால்" இந்த மண்ணை இனியாவது ஒரு தமிழரே ஆளட்டும்" என விட்டு கொடுத்ததற்காகவும், நல்ல உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இன்னும் நிறைய படங்கள் நடிக்க முடிவெடுத்ததற்காகவும்
உங்களின் தீவிர ரசிகனாக, அகம் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன். pic.twitter.com/lsOt4NkeCu