சாதாரணமாக சொன்னதற்கே இப்படியா?... ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து மிரண்ட பிரசாந்த் நீல்!

தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது கேஜிஎப் மற்றும் சலார் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டிராகன் என்று பயெரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ருக்மம்ணி வசந்த், பிஜு மேனன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
dragon movie

தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது கேஜிஎப் மற்றும் சலார் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ருக்மம்ணி வசந்த், பிஜு மேனன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் மற்றும் சலார் படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் நீலலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

 நேற்று முந்தினம்  (மே 20) ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பிரம்மாண்டமான  Glimpse' வீடியோ வெளியிடப்பட்டது. அது அனைவருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ஜூனியர் என்.டி.ஆர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். இது குறித்து அப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் கூறுகையில், 

டிராகன் படத்திற்காக 4 மாதங்களில் 15 கிலோ எடையை ஜூனியர் என்.டி.ஆர் குறைத்தார்.கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைக்க சாதாரணமாகதான் கூறினேன். ஆனால் அவர் வெறித்தனமாக உழைத்து உடல் எடையை குறைத்துள்ளார். அவர் மெலிந்து காணப்பட்டதால் பயந்துபோன அவரது அம்மா, மற்றும் மனைவி என் ம்மேல் கடும் கோபத்தில் உள்ளனர் என்று கூறினார்.

From Around the web