
Cinema News
தொடர் ஃபிளாப் கொடுத்தும் அடங்காத சியான்!.. பாவம் 96 பட டைரக்டர் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு!..
Actor Vikram: நடிகர் விக்ரம் கடைசியாக எப்போது வெற்றி பணம் கொடுத்தார் என்பது அவரின் ரசிகர்களுக்கே மறந்து விட்டது. இடையில் பொன்னியின் செல்வன் வெற்றிப் படமாக அமைந்தாலும் அந்த படத்தில் விக்ரம் ஹீரோ இல்லை. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி எதிர்பார்ப்பு ஏற்படுத்திய கோப்ரா படம் ஓடவில்லை. அப்புடம் ரசிகர்களுக்கே புரியவில்லை.
அதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் கடுமையான உழைப்பை போட்டு நடித்த ஐ படமும் ஹிட் படமாக அமையவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த மகான் படமும் தியேட்டரில் வெளியாகவில்லை. அருண்குமார் இயக்கத்தில் நடித்த வீரதீர சூரன் படமும் பல சிக்கல்களை சந்தித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
வீரதீர சூரனுக்கு பின் மண்டேலா மற்றும் மாவீரன் படங்களை இயக்கிய மடோனே அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இயக்குனருக்கும் விக்ரமுக்கும் இடையே செட் ஆகாமல் போனதால் அது டிராப் ஆனது. அடுத்து 96 பட இயக்குனர் 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம் குமார் விக்ரமுக்கு ஒரு கதை சொன்னார்.

கதை பிடித்திருந்தாலும் அதில் சிலவற்றை மாற்ற சொன்னார் விக்ரம். கேரளாவுக்கு எல்லாம் சென்று முழு கதையும் தயார் செய்து விக்ரமிடம் கொடுத்துவிட்டார் பிரேம். கதையை படித்து பார்த்த விக்ரம் ‘கதை நன்றாக இருந்தாலும் நான் ஒரு மாஸ் ஹீரோ.. எனவே இதில் ஆக்சன் காட்சிகளை சேருங்கள்’ என சொல்ல பிரேம் கடுப்பாகி விட்டாராம்.
‘அது போன்ற படம் எல்லாம் நான் செய்ய மாட்டேன்.. அது என் ஸ்டைல் இல்லை’ என சொல்லி இருக்கிறார். இரண்டு பேருக்கும் இடையே உருவாகியுள்ள இந்த கருத்து வேறுபாடு தொடர்ந்தால் இந்த படமும் டேக்ஆப் ஆகாது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.