Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆர் நடிப்பில் திருப்தியடையாத இயக்குனர்.. மீண்டும் கேட்ட ஒன் மோர்.. பதறிய படக்குழு…

தமிழக சினிமா வரலாற்றில் ஒரு ஒப்பற்ற நடிகராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் இன்று நம்மிடம் இல்லையென்றாலும் இன்றளவும் அவரின் புகழையும் பெருமையையும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் எந்த அளவுக்கு பேரும் புகழோடும் வாழ்ந்திருப்பார் என்று இன்றைய தலைமுறையினரால் யூகிக்க முடியும்.

mgr1

ஒரு நல்ல தலைவருக்கு நல்ல நடிகருக்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் எம்ஜிஆர். முதலமைச்சர் ஆனதில் இருந்து மக்களுக்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதையே மனதில் நிறுத்திக் கொண்டு அரசாற்றி கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : விலகி கொள்கிறேன் என்று சொன்னாலும் கேட்கல!.. ‘பாண்டியநாடு’ வெற்றிக்குப் பின்னாடி இருக்கும் பாரதிராஜாவின் சோகக்கதை!..

கூட்டத்தில் உயர்வு தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் ஒன்றாக பழகி வந்தார் எம்ஜிஆர். இப்படி அவருடன் நடித்த நடிகர்கள் , இயக்குனர்கள் என அவரின் நல்ல நல்ல பண்புகளை பற்றி பல பேட்டிகளில் கூறிவருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் எம்ஜிஆருடன் பணியாற்றிய அனுபவத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

mgr2

எம்ஜிஆர் நடிப்பில் உருவான பணத்தோட்டம் திரைப்படம் 1963ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். இந்த படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணிபுரிந்தவர் ரா.சங்கரன். இவர் ஏராளமான திரைப்படங்களிலும் பல நாடகங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : விஜய் செய்யத்தவறிய இரண்டு விஷயங்கள் இதுதான்!!.. மனம் திறந்த பிரபல தயாரிப்பாளர்…

பணத்தோட்டம் படத்தின் ஒரு காட்சியில் எம்ஜிஆர் அம்மா போஸ்ட் என்று சொல்லிக் கொண்டே வீட்டின் முன்னாடி சொல்லி நிற்க வேண்டும். இந்த காட்சியில் எம்ஜிஆர் நடிக்கும் போது கொஞ்சம் ஒவராக ஸ்டண்ட் பாணியில் அவருகே உரிய சுட்டியுடன் துள்ளிக் குதிச்சு அம்மா போஸ்ட் என்று சொன்னாராம்.

ra.shankaran

இதை பார்த்த அசிஸ்டெண்ட் இயக்குனர் ரா. சங்கரன் சார் ஒன்மோர் என்று சொன்னதும் எம்ஜிஆர் உட்பட அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்களாம். கூட இருந்தவர்கள் சில பேர் ‘என்னய்யா எம்ஜிஆரிடமே ஒன்மோர் கேட்குற? சும்மா இருக்கட்டும் ’ என்று சொல்ல அதற்கு சங்கரோ ஒரு போஸ்ட் மேன்னா என்ன பண்ணனும்? அம்மா போஸ்ட் என்று சொல்லிவிட்டு வீட்டின் உரிமையாளர் வரவரைக்கும் வெளியில் சும்மா இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் எம்ஜிஆர் செய்தது எனக்கு திருப்தியாக இல்லை. அதனால் தான் ஒன்மோர் கேட்டேன் என்று சங்கரன் கூற எம்ஜிஆரும் பரவாயில்லை. அவருக்கு பிடிக்கவில்லை என்றால் டேக் எடுத்துக் கொள்ளலாம் என்று மறுபடியும் நடித்தாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini