மகேந்திரனின் உதிரி பூக்கள் எல்லாம் ஒரு சாதாரண படம் - அடுத்த வாட்டர்மிலன் ஸ்டாராக உருவாகும் ராஜகுமாரன்
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக் பணியாற்றியவ்ர் ரஜகுமாரன். ஒரு கட்டத்தில் வெளியேறி சூபப்ர் குட் பிலிம்ஸில் பார்த்திபன், தேவயானி நடிப்பில் நீ வருவாய் என்ற படத்தி இயக்கினார்.அந்த படத்தின் படப்பிடிப்பின்போதே தாவயானி மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து அவரது காதலுக்காகவே விக்ரம் , தேவயானி மற்றும் சரத்குமாரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். இதனை உனர்ந்த ஆர்.பி . சௌதிர் கூட ராஜகுமாரன் மீது வருத்தம் அடைந்ததாக தகவல்கள் உண்டு.
இந்த நிலையில் தேவயானியை திருமணம் செய்துகொண்டபின் முரளி, தேவயானியை வைத்து காதலுடன் என்ற் படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால் இந்த படம் பிளாப் ஆனது. இத்துடன் இயக்கத்திறு முற்றுபுள்ளி வைத்தார். இதையடுத்து கடுகு என்ற படத்தில் நாயக்னாக நடித்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பாரட்டபட்டாலும் படம் தேரவில்லை. இதனால் வாய்ப்புகள் இல்லாமல் சந்தானம் படத்தில் ஒரு காமெடி ரோலில் நடித்தார்.
இந்த நிலையில் ராஜ்குமாரன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் ராமநாராயணன் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆனால் ஒன்று ரெண்டு படங்களை இயக்கியுள்ள மகேந்திரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். நான் மகேந்திரன் படங்களை பார்த்ததில்லை. ஆனால் சமீபத்தில் அவரது உதிரி பூக்கள் படத்தின பார்த்தேன். அது ஒரு சாதாண படம்தான். அப்படத்தில் ஒன்றும் பெருசாக ஒன்றும் இல்லை. கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் இந்த மொத்த படமே. பொண்டாடியின் தங்கையை பொண்டாட்டி ஆக்கிகனும்கிறதுதான் அந்த படத்தின் கதையே. இது ஒரு பெரிய விசயமா? இதற்கு 2 1/2 மணி நேரமா என்று பேசியுள்ளார்.

மகேந்திரனை கொண்டாடாத ஆட்களே இல்லை. இன்றும் உதிரி பூக்கள் படத்தினை பாராட்டாதவர்களே கிடையாது. ஆனால் ராஜகுமாரன் இவ்வாறு கூறுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு இயக்குனராக இருந்துகொண்டு உலகமே கொண்டாடும் ஒரு தரமான படத்தை இவ்வாறு பேசுகிறாரே என்றும் கூறுகின்றனர். மேலும் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் போன்று பேசுகிறாரே, என்றும் கமெண்ட் செய்கின்றனர்.
சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகரே இல்லை என்று ராஜகுமாரன் கூறியது குறிப்பிடதக்கது.
