Connect with us

Cinema News

ரஜினி, விஜய்,அஜித் எல்லாம் இவருக்கு கீழதான் – தேவயானி கணவர் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக பார்க்கப்படுபவர்களில் ரஜினி,விஜய்,கமல், அஜித் இவர்கள் நால்வரும் மிக முக்கியமானவர்கள். நால்வருமே தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகின்றனர். ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் துவங்கி இப்போது வரை மார்க்கெட் குறையாத நடிகர்களாக ரஜினி. கமல் உள்ளனர்.

அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களாகதான் விஜய்யும் அஜித்தும் வந்தனர். ஆனாலும் அவர்களுக்கு இணையான வசூல் சாதனையை இவர்கள் படைத்து வருகின்றனர். ஆனால் சமீபத்தில் இயக்குனர் ராஜகுமாரன் தனது பேட்டியில் அவர்கள் எல்லாம் பெரும் நடிகர்கள் கிடையாது என்பதாக பேசியுள்ளார்.

rajakumaran devayani

rajakumaran devayani

இயக்குனர் ராஜகுமாரன் நடிகை தேவயானியின் கணவர் ஆவார். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தை எடுக்கும்போது இவருக்கும் தேவயானிக்கும் காதலானது. தற்சமயம் இவர் பேட்டியில் பேசும்போது சரத்குமாருக்கு இணையான நடிகர் தமிழ் சினிமாவிலேயே கிடையாது என்றார்.

சரத்குமார்தான் சிறந்த நடிகர்:

வாரிசு படத்தில் கூட விஜய் அவ்வளவாக நடிக்கவில்லை. அவர் எப்போதும் தனது தந்தையை பார்த்து திமிராக பேசுவார். நேரில் வேண்டுமானால் விஜய் அவரது அப்பாவிடம் அப்படி இருக்கட்டும். ஆனால் படத்தில் நல்லதைதான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் சரத்குமார் மட்டுமே சரியாக நடித்திருப்பார்.

sarathkumar

sarathkumar

அதே போல கமல்,ரஜினி,விஜய்,விக்ரம் என எந்த நடிகரையும் சரத்குமாரோடு ஒப்பிட முடியாது. தனியான நடிப்பு திறமையை கொண்டவர் சரத்குமார் என கூறியுள்ளார் ராஜகுமாரன்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பிறகு அவருடன் நடிக்காத நடிகை!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top