×

முதல் முறையாக ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதும் இயக்குனர் ராம்!

பெங்காலியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வின்சி டா எனும் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

 

பெங்காலியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வின்சி டா எனும் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இந்தியாவில் தரமான கலைப் படைப்புகள் உருவாக்குவதில் இன்றும் வங்காள சினிமா முன்னணியில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பெங்காலித் திரைப்படம் 'வின்சி டா'. இந்த திரைப்படத்தில் ருத்ரனில் கோஷ், ரித்விக்  உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ரீமேக் உரிமையை பிரபல தமிழ் தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் வாங்கியுள்ளார்.

இந்த படத்துக்கான திரைக்கதையையும் தனது நண்பரான இயக்குனர் ராமுடன் இணைந்து எழுதியுள்ளார். விரைவில் யார் இந்த படத்தை இயக்குவார் என்பது அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News