Categories: Cinema News latest news

கமல்ஹாசனை மனதில் வைத்துக்கொண்டு இயக்குனர் ராம் எழுதிய கதை… ஆனா சோகம் என்னன்னா?…

இயக்குனர் ராம் தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழ்ந்து வருகிறார். மேலும் அவர் ஒரு டிரெண்ட் செட்டராகவும் பல உதவி இயக்குனர்களுக்கு முன்னோடியாகவும் வலம் வருகிறார். அவரது திரைப்படங்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

ராம் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “கற்றது தமிழ்”. இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா ஒரு பிறழ்வு மனநிலை உடைய கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இத்திரைப்படம் இப்போதும் பல சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, இயக்குனர் ராம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது இயக்குனர் ராம், “கற்றது தமிழ்” திரைப்படத்தின் கதையை கமல்ஹாசனை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதினாராம். ஆனால் அப்போது ராம் உதவி இயக்குனராக இருந்ததால் கமல்ஹாசனை சந்திக்ககூட முடியவில்லையாம்.

அதன் பிறகுதான் ஜீவாவிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். “கற்றது தமிழ்” கதை ஜீவாவுக்கு பிடித்துப்போக உடனே ஒப்புக்கொண்டாராம். அதன் பின் “கற்றது தமிழ்” திரைப்படம் வெளிவந்த பிறகு பல பத்திரிக்கைகளில், “கமல்ஹாசன் மாதிரியான ஒரு நடிகர் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் ஜீவா மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று அவரை பாராட்டியிருந்தார்களாம்.  

Arun Prasad
Published by
Arun Prasad