மே 8-ல் திரைக்கு வரும் 29 : ரத்னகுமாரின் புதிய படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

மேயாத மான் படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ரத்னகுமார். முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அவர் இயகி அடுத்த படங்களான ஆடை, குலு குலு போன்றவை பெரிதாக ஓடவில்லை. லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரான இவர் லோகேஷ் படங்களான மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இணை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்த படம் 29 என பெயரிடப்பட்டுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் மே மாதம் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கோடை விடுமுறை நேரத்தில் இந்த படம் வெளியாக உள்ளதால், இது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டும் என திரைத்துறையினர் கணிக்கின்றனர்.

From Around the web