
latest news
விஜயகாந்த் அழுதுட்டார்!.. கேப்டன் பிரபாகரன் அனுபவம் பேசும் ஆர்.கே.செல்வமணி…
Published on
By
Captain Prabhakaran: நடிகர் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாக வெளிவந்தது கேப்டன் பிரபாகரன். 1991ம் வருடம் வெளியான இப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்தும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருந்தனர்.
விஜயகாந்தை வைத்து ஆர்.கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை படத்தின் மேக்கிங் விஜயகாந்த், ராவுத்தர் இரண்டு பேருக்குமே மிகவும் பிடித்திருந்தது. அதோடு படமும் வெற்றி பெற்றதால் ‘என்னுடைய நூறாவது படத்தை நீயே இயக்கு’ என்கிற வாய்ப்பை செல்வமணிக்கு கொடுத்தார் விஜயகாந்த்.
அப்படி வெளியான கேப்டன் பிரபாகரன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. அதோடு கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இப்படம் தமிழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான 12 நாட்களில் இதுவரை 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து பல ஊடகங்களிலும் இந்த படம் பற்றிய அனுபவங்களை இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே செல்வமணி பகிர்ந்து வருகிறார்.
ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.கே செல்வமணி ‘ராவுத்தரும் விஜயகாந்தும் என்னிடம் முழு கதையையும் கேட்கவில்லை. முழுதாக என்னை நம்பினார்கள். அதோடு நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுக்கும் சுதந்திரத்தையும் கொடுத்தார்கள். நான் என்ன எடுக்கிறேன்? எதற்காக எடுக்கிறேன்? என்று கேட்காமல் விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ராவுத்தருக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. ராவுத்தர் சொன்னால் விஜயகாந்த் அப்படியே கேட்பார். எனவே அதி எனக்கு வசதியாக இருந்தது.
சென்சாருக்கு அனுப்புவதற்காக படத்தின் முதல் பாதியை விஜயகாந்திடம் போட்டுக் காட்டினேன். படத்தை பொறுமையாக பார்த்த அவர் படம் முடிந்ததும் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்துக்கொண்டார். என்னை பார்த்து ‘தம்பி நீ என்ன பெரிய தயாரிப்பாளர் ஆக்கிட்ட’ என சொன்னார்’ என கூறியிருக்கிறார் ஆர்.கே செல்வமணி.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...