Categories: Cinema News latest news

ரஜினிக்காக அத டிரை பண்ணி பெரும் அடியை சந்திச்சதுதான் மிச்சம்!.. புலம்பும் சங்கர்..

கோலிவுட்டில் ஒரு வசூல் மன்னனாக தலை சிறந்த நடிகராக உச்ச நட்சத்திரமாக மக்கள் மனதில் அச்சாணி போல பதிந்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலிலும் இவரை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார்.

அனைவருக்கும் பிடித்தமான நடிகர்

அந்த அளவுக்கு ரஜினியின் மீது மக்கள் அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். ஏன் தற்போது உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். எந்த பிரபலங்களிடமும் உங்களுக்கு பிடித்தமான நடிகர் யார் என்று கேட்டால் அவர்கள் கூறும் ஒரே பெயர் ரஜினிகாந்த். அதேபோல ரஜினியும் தான் பழகும் எல்லா நடிகர்களிடமும் ஒரே மாதிரியான மனப்பான்மையையே கொண்டு பழகுவார்.

rajini1

தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ஒரு அகங்காரத்தை எப்பொழுதுமே தன் தலையில் தூக்கி வைத்ததே இல்லை ரஜினி. இந்த அளவுக்கு உயரத்தை அடைந்தாலும் தன்னால் எப்படி இந்த அளவு வளர்ச்சியை அடைய முடிந்தது என்ற ஒரு சந்தேக கண்ணிலேயே தன்னுடைய வளர்ச்சியை பார்த்துக் கொண்டு வருகிறார் ரஜினிகாந்த். அதை பல மேடைகளிலும் அவரே குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.

ரசிகர்களுக்கான கருத்துக்கள்

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ரஜினி எந்த மேடை ஏறினாலும் ரசிகர்களுக்கு என்னென்ன கருத்துக்கள் அவர்களுக்கு நல்வழிப்படுத்துமோ அந்த கருத்துக்களை முதலில் சொல்லுவார். தன்னைச் சார்ந்த ரசிகர்களை ஒரு நல்ல வழிக்கு கொண்டு போக வேண்டும் என்ற அதிக அக்கறை கொண்ட நடிகராக இருக்கிறார் ரஜினி.

rajini2

இத்தனை சிறப்புமிக்க ரஜினியை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பிரபல சினிமா இயக்குனரான சங்கர் சமீபத்தில் கூறியுள்ளார். சங்கரும் ரஜினிகாந்த்தும் இணைந்து ரோபோ, எந்திரன், 2.0 போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் சங்கரும் ரஜினியின் ஒரு தீவிரமான ரசிகர் என்பது அவர் கூறிய தகவலில் இருந்து தெரிகிறது. அதாவது ரஜினி நடித்த சதுரங்கம் என்ற படத்தை பார்ப்பதற்காக முன்பு குரோம்பேட்டைக்கு ஒரு எலக்ட்ரிக் ட்ரெயினில் பயணித்தாராம் சங்கர்.

இதையும் படிங்க : லியோ படத்தில் மனோபாலாவிற்கு ஏற்பட்ட சங்கடம்!.. விஜய் வந்த காரணமும் இதுதானோ?..

டிரெயினில் சாகசம்

எப்பொழுதுமே ட்ரெயினில் பாதுகாப்பாக பயணிக்கும் சங்கர் அன்று மட்டும் ரயில் போகும்போது ட்ரெயினில் இறங்க முயற்சித்திருக்கிறார். சரி முயற்சி செய்யலாமே என்று ட்ரெயின் மூவ் ஆகிக் கொண்டிருக்கும் போதே இறங்கி இருக்கிறார். அப்பொழுது நிலை தடுமாறி சங்கர் கீழே விழுந்து விட அவருடைய முட்டியில் காயம் பட்டு ரத்தம் வந்து விட்டதாம். அந்தக் காயத்தோடு வெற்றி தியேட்டரில் ரஜினியின் சதுரங்கம் படத்தை பார்த்ததாக சங்கர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

rajini3

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini