×

வாழ்க்கை ஒரு ஈசி.. கஸ்டம் வேண்டாம்.. கருத்து கந்தாசாமியாக மாறிய செல்வராகவன்..

இயக்குநர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
 
வாழ்க்கை ஒரு ஈசி.. கஸ்டம் வேண்டாம்.. கருத்து கந்தாசாமியாக மாறிய செல்வராகவன்..

இயக்குநர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் இயக்கத்தில் அவர் வேலை செய்து வருகிறார்.

விஜய்யின் தளபதி 65 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் செய்துள்ள ட்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன் வித்தியாசமான இயக்குநராக பார்க்கப்படுகிறார். இவரது கேரக்டர்கள் அனைத்துமே மனிதர்களின் ஏக்கத்தின் பிரதிபலிப்பாக காணப்படுகிறது. இவரின் பல்வேறு படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளதாக பேசப்படுகிறது. தொடர்ந்து 3 வாரங்களை கடந்துள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான இயக்கத்திலும் செல்வராகவன் செயல்பட்டு வருகிறார். மேலும் தளபதி 65 படத்திலும் முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார். இயக்குநராக மற்றவர்களை ஆட்டுவித்து வரும் அவர் முதல்முறையாக மற்ற இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்களை வைத்துவரும் அவர் தற்போது வாழ்க்கை குறித்த அருமையான பதிவை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் எல்லாமே எளிதுதான் என்றும் நாம்தான் கண் காது மூக்கு வைத்து கடினமாக்கிக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News