வேள்பாரிக்கு முன்னாடி ஒரு படம்; அதுவும் வேற மாதிரி..புது யோசனையில் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரமாண்டங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். அறிமுகம் ஆன முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் ட்ரெயின் பைட் உள்ளிட்ட பல பிரமாண்ட காட்சிகளை அமைத்த அவர் இரண்டாவதுய் படமான காதலன் படத்தில் ஊர்வசி பாடலுக்கு கண்ணாடியிலேயே ஒரு பேருந்தை தயார் செய்து அசத்தினார்.
 
director shankar

தமிழ் சினிமாவில் பிரமாண்டங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். அறிமுகம் ஆன முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் ட்ரெயின் பைட் உள்ளிட்ட பல பிரமாண்ட காட்சிகளை அமைத்த அவர் இரண்டாவதுய் படமான காதலன் படத்தில் ஊர்வசி பாடலுக்கு கண்ணாடியிலேயே ஒரு பேருந்தை தயார் செய்து அசத்தினார். தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் எல்லாம் காட்சிகளில் பிரமாண்டங்களை புகுத்துபவர் ஷங்கர்.  ஷங்கர் இயக்கத்தில் இறுதியாக வந்த படம் கேம் சேஞ்சர் . ராம் சரண் நடிப்பில்  வந்த இப்படம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் ஷங்கர் தனது கனவு படமான வேள்பாரியை இயக்க தயார் ஆகி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் முடிவடைய நீண்ட காலம்  ஆகும் என்பதால் குறுகிய காலத்தில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். விறுவிறுப்பான ஆக்சன் திரிலல்ரில் உருவாகும் இப்படம் வழக்காமான ஷங்கரின் பிரமாண்ட பாணியில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட பரபரப்பான திரைகதை அமைப்பில் தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிக்க இரண்டு இளம் நாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

From Around the web