ஆரம்பமானது இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங்!
Jun 18, 2026, 13:18 IST
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகப் போகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அசோக் இயக்குகிறார்.
இவர் 'ராஜா ராணி, தெறி, ஜவான்' போன்ற படங்களின் இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அர்ஜித்துக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.
'பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டதாம். இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது, இதன் ஷூட்டிங் இன்று (ஜூன் 18-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் ஷங்கரின் மகன் அறிமுகமாகும் படம் என்பதால், இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
