இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக நடிக்கும் 'லவ்வர் பாய்'... முதல் படத்தின் பட்ஜெட்டே இத்தனை கோடியா?
Jun 22, 2026, 17:07 IST
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் 'லவ்வர் பாய்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
'லவ்வர் பாய்' படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற அசோக் குமார் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.
'பேஷன் ஸ்டுடியோஸ் - KVN புரொடக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதற்கு தேஜஸ் கிருஷ்ணா இசையமைத்து வருகிறார், கலைச்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார், கலைவாணன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில், இதன் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் பட்ஜெட் ரூ.9 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
