மூன்று பாகமாக உருவாகும் வேள்பாரி!.. பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுக்கும் ஷங்கர்!…

0
107

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே சூப்பர் ஹிட். அதோடு பிரம்மாண்ட செலவில் அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என கவனம் ஈர்த்தார் ஷங்கர். ஷங்கர் படங்கள் என்றாலே அது பிரம்மாண்டமாக இருக்கும் என்கிற இமேஜும் உருவாகிவிட்டது.

முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கினார் ஷங்கர். இப்போது இந்திய சினிமாவில் ஷங்கர், ராஜமவுலி, பிரசாந்த் நீல் ஆகிய 3 பேர் மட்டுமே பிரம்மாண்டமாக திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமவுலியே என்னுடைய குரு ஷங்கர் சார்தான் என சொல்லி இருந்தார்.

தமிழ் சினிமாவில் நாவலை படமாக எடுப்பது என்பது அரிதாகவே நிகழும். வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே அதை முயற்சி செய்வார்கள். அவர் இயக்கிய அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய 3 படங்களுமே நாவல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான்.

அதேபோல், கல்கி இயக்கிய பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர், கமல் என பலரும் முயன்று முடியாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாக்கினார். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றியும் பெற்றார். இதில் முதல் பாகமே நல்ல லாபத்தை கொடுத்தது.

இதையடுத்து சு.வெங்கடேசன் இயக்கிய வேள்பாரி நாவலை ஷங்கர் படமாக எடுக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியானது. ஆனால், ஷங்கர் இதுபற்றி எங்கும் பேசவில்லை. அதோடு இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என 2 பெரிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வந்தார். இதில் இந்தியன் 2 வருகிற 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 பட புரமோஷன் விழாவில் வேள்பாரி பற்றி பேசிய ஷங்கர் ‘கொரோனா காலத்தில் எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக திரைக்கதை எழுதிவிட்டேன். அதை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன். ஆனால், நடிகர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என சொல்லி இருக்கிறார்.

google news