கடந்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாகி இந்திய திரையுலகையே ஆட்டிப்படைத்த திரைப்படம் கே.ஜி.எஃப்-2. தற்போது வரை இந்த திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் இந்தியா முழுக்க ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வசூலை அசால்டாக தாண்டி இன்னும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது கே.ஜி.எப் 2 திரைப்படம்.
இதுவரை இல்லாத அளவுக்கு கன்னட திரைப்படம் ஒன்று வெளியாகி இத்தனை கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறை. இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தை தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்து வியந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ துல்லியமான கதை காட்சியமைப்புகள், திரைக்கதை சுவாரசியங்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது எனவும், நடிகர் யாஷ்க்கு வாழ்த்துக்கள் என்று கூறி, மேலும், பெரியப்பாவை கொடுத்ததற்கு நன்றி என இயக்குனர் பிரசாந்த் நீலை டேக் செய்து கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – இந்த விஷயத்தை எப்படியாவது சேத்துருங்க.., H.வினோத்திற்கு வலுக்கும் கோரிக்கை என்ன தெரியுமா.?
பெரியப்பா என்பது கே.ஜி.எப்-2 படத்தில் வரும் மிகப்பெரிய துப்பாக்கி. அதனை செல்லமாக படத்தில் பெரியம்மா என அறிமுகப்படுத்துவர். பின்னர் ஒரு சின்ன பையன் வந்து இது பெரியம்மா அல்ல பெரியப்பா என்று கெத்தாக சொல்வான். அந்த காட்சிக்கு ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி தீர்த்தனர். அதனை குறிப்பிட்டு பிரம்மாண்ட இயக்குனர் இப்படி கூறியது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது RRR பட ஹீரோ ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…