×

பல வருடங்கள் ஆகியும் ஷங்கரின் நிறைவேறாத ஆசை...கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!...

 
shankar

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் ஷங்கர். அதன்பின் காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என மெகா பட்ஜெட் படங்களை இயக்கினார். இவரின் திரைப்படங்களில் சமூக பிரச்சனை பலமாக எதிரொலிக்கும். இந்தியன் படம் லஞ்சத்தையும், அந்நியன் படம் அலட்சியத்தையும், ஜென்டில்மேன் மற்றும் சிவாஜி ஏழை மக்களின் கல்வியையும் பேசியது.

shankar

தமிழ் சினிமாவின், ஏன் இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படுபவர். தொழில்நட்பத்தை பயன்படுத்தி இந்திய அளவில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியவர்.  இவரது இயக்கத்தில் நடிக்க கோலிவுட் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே ஆசைப்படுவதுண்டு. 

shankar

அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 ஆகிய படங்களில் சில பிரச்சனைகளை சந்தித்த அவர் தற்போது ஒருவழியாக அதிலிருந்து விடுபட்டு தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவுள்ளது. 

ஷங்கர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். திரைத்துறையில் நுழைவதற்கு முன் குவாலிட்டி கண்ட்ரோல் சூப்பர்வைசராக பணிபுரிந்தவர். நாடகம், இசை, பாடல் எழுதுவது ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். இவரது நாடகத்தை பார்த்த நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இவரை உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஷங்கர், வேறு சிலரிடம் வேலை செய்து பின் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனரானார்.

shankar

ஷங்கருக்கு சினிமாவில் எப்படியாவது ஒரு காமெடி நடிகராக வேண்டும் என்கிற ஆசைதான் இருந்துள்ளது. ஆனால், அவரை உதவி இயக்குனராக மாற்றியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் இயக்கிய சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் ஷங்கர் நடித்துள்ளார். ஆனால், காலம் அவரை இந்திய திரையுலகமே வியக்கும் இயக்குனராகி விட்டது. காமெடி நடிகர் என்கிற ஆசை கடைசி வரைக்கும் ஷங்கருக்கு நிறைவேறாமல் போய்விட்டது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News