Connect with us

Cinema News

அரண்மனை படத்தில் அவங்க நடிச்சிருந்தா மோசமாயிருக்கும்.! –  இரண்டு முக்கிய நடிகர்களை நீக்கிய சுந்தர் சி..

பல ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து இப்போதும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத இயக்குனராக இருந்து வருபவர் சுந்தர் சி. தமிழில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு மிகவும் பிரபலமானாவர் சுந்தர் சி.

லாரன்ஸ் தனது இயக்கத்தில் முனி திரைப்படத்தின் பாகங்களை கொடுத்தது போல சுந்தர் சியும் அரண்மனை திரைப்படங்களை வரிசையாக கொடுத்து வருகிறார். அரண்மனை திரைப்படத்தை பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படத்திலும் கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், திரைக்கதையில் அதை மாற்றி அமைத்து சுவாரஸ்யமாக்கியிருப்பார் சுந்தர் சி.

Aranmanai
Aranmanai

அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் இருந்தே அந்த படங்களில் சுந்தர் சி இருப்பார். முதல் பாகத்தில் கதாநாயகனாக வினய் இருப்பார். இரண்டாவது கதாநாயகனாக சுந்தர் சி இருப்பார். ஆனால் அந்த சமயத்தில் அரண்மனை திரைப்படத்தில் நடிப்பதற்கான யோசனையே இல்லாமல் இருந்துள்ளார் சுந்தர் சி.

படத்தில் இருந்து நீக்கிய சுந்தர் சி:

சுந்தர் சி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும், அவருக்கு தங்கை கதாபாத்திரமாக ஆண்ட்ரியா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்க வைக்க முடிவாகியிருந்தது. அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அப்போதுதான் அவர்கள் இருவரும் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்தனர்.

aranmanai3

ராஜா ராணி திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துவிட்டனர். இதற்கு பிறகு அவர்களை எப்படி அரண்மனை திரைப்படத்தில் அண்ணன் தங்கையாக நடிக்க வைப்பது என யோசித்தார் சுந்தர் சி. ஆர்யா நயன்தாரா நடிக்கிறார்கள் என்பதற்காகவே படம் ஓடிவிடும். ஆனால் அவர்களின் சினி மார்க்கெட் இதனால் மோசமாகிவிடும் என யோசித்தார் சுந்தர் சி.

எனவே அவர்கள் இருவருக்கும் போன் செய்து இந்த கதாபாத்திரம் உங்களுக்கு சரிப்பட்டு வராது என கூறிவிட்டார். அதன் பிறகுதான் சுந்தர் சியே அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அரண்மனை 3 திரைப்படத்தை இயக்கும்போது அதில் ஆர்யாவிற்கு வாய்ப்பு கொடுத்தார் சுந்தர் சி.

Continue Reading

More in Cinema News

To Top