Categories: Cinema News latest news throwback stories

என்னாலதான் அந்த சரத்குமார் படம் ஃப்ளாப் ஆனுச்சு..! –  வெளிப்படையாக கூறிய இயக்குனர்…

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிறகு ஹீரோவான நடிகர்களில் சரத்குமாரும் முக்கியமானவர். சரத்குமார் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சத்யராஜை போலவே வில்லனாகதான் தோன்றினார். அதன் பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து கதாநாயகனாக நடித்தார்.

அந்த சமயத்தில் சரத்குமாருக்கு மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் சூர்ய வம்சம். சூர்ய வம்சம் திரைப்படம் வெளியானபோது தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனையடுத்து அந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் கதாநாயகனாக நடித்தார்.

Sarathkumar

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுராஜ்க்காக ஒரு படம் நடிக்க இருந்தார் சரத்குமார். சுராஜ் சரத்குமாரை வைத்து மூவேந்தர் என்கிற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் மூவேந்தர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. படம் தோல்வியடைந்தது.

உண்மையை கூறிய இயக்குனர்:

ஒரு பேட்டியில் சுராஜ்ஜிடம் பேசும்போது மூவேந்தர் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என கேட்டபோது, அதற்கு பதிலளித்த சுராஜ் “உண்மையில் படம் தோல்வியை கண்டதுக்கு நான்தான் காரணம். ஏனெனில் அதற்கு முன்பு வந்த சூர்ய வம்சம் திரைப்படத்தில் சரத்குமார் ஒரு அப்பாவியான கதாபாத்திரம்.

ஆனால் நான் மூவேந்தர் படத்தில் எழுதும்போது அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் எதிர்மறையாக வைத்தேன். அது மக்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் சரத்குமார் என்னிடம் எந்த குறையும் கூறவில்லை” என கூறியுள்ளார் சுராஜ்.

இயக்குனர் சுந்தர் சியிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான் இயக்குனர் சுராஜ்.

இதையும் படிங்க: பிரசாந்த் சினிமாவில் நடிக்க காரணமே சத்தியராஜுதான்! – உண்மையை உடைத்த தியாகராஜன்

Rajkumar
Published by
Rajkumar