Categories: Cinema News latest news

ஒரு இடத்துல 10 கெட்டவார்த்தை பேசினார் சூர்யா.! பதறிய இயக்குனர்.!

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சூரரைப் போற்று திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையையும், அவர் தனது விமானத் துறையில் எப்படி நுழைந்தார் என்பதையும் தழுவி எடுக்கப்பட்டது. நெடுமாறன் ராஜாங்கம் கேரக்டரில் நடித்த சூர்யா சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்

அண்மையில், ஒரு பேட்டியில் சுதா கொங்கரா சூரரை போற்று ஷூட்டிங் அனுபவத்தைத் பற்றி கூறுகையில், சூரரை போற்று படத்தில் ஒரு காட்சிக்கு கெட்ட வார்த்தை பேசுவது போல் காட்சிகள் தேவைப்பட்டபோது, சூர்யா 10 கெட்ட வார்த்தைகள் பேசினாராம். நிஜ வாழ்வில் அவர் அப்படி பேச கூடிய ஆள் இல்லை. ஆனால் அந்த கேரக்டருக்காக அப்படி பேசியிருந்தார்.

இதனை கண்ட சுதா கொங்கரா அதிர்ச்சியில், இதெல்லாம் உங்க அப்பா பார்த்தார்னா என்ன தான் திட்டுவார்னு சொன்னதும், எங்க அப்பா உன்னதான திட்டுவாரு. நீதான் பேச சொன்னாதான் சொல்லுவேன் என கேஸூலாக சொன்னாராம் நடிகர் சூர்யா.

சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும் அவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் சூர்யா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. சுதா தற்போது சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் பிசியாகி வேலை செய்து வருகிறார்.

Manikandan
Published by
Manikandan