Categories: Cinema News latest news

இதுனாலதான் என் புள்ள இவ்ளோ பெரிய ஆளா இருக்கான்! – டி.ராஜேந்தர் சொன்ன ரகசியம்!..

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரிசையாக வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகர் சிம்பு. இறுதியாக அவர் நடித்து வெளியான பத்து தல திரைப்படமும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து அடுத்ததாக கமல் தயாரிப்பில் படம் நடிக்க இருக்கிறார் சிம்பு. பத்து தல திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் தந்தையான இயக்குனர் டி.ராஜேந்தர் அந்த படம் குறித்து அதிக ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

பத்து தல வெளியான காலக்கட்டத்தில் கூட பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த டி.ஆர். பத்து தல படத்தை வெகுவாக புகழ்ந்து பேசி இருந்தார். தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமான தொடரான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் துவங்கியுள்ளது.

விளக்கம் கொடுத்த டி.ராஜேந்தர்:

அதில் டி.ராஜேந்தரும் ஒரு நடுவராக பங்கேற்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் சிம்பு வேடமணிந்து வந்தார். அதை பார்த்து சிம்புவையே அவமானப்படுத்திட்டியேடா என அவரை கேலி செய்தனர். அப்போது பேசிய டி.ஆர் “என் புள்ள இவ்ளோ பெரிய ஆளா ஆகுறதுக்கு என்ன என்ன காரணம் தெரியுமா?

Pathu Thala

சின்ன குழந்தையா இருந்தாலும் சரி வயசான ஆட்களா இருந்தாலும் சரி, யாராவது சிம்பு மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தாலோ, அல்லது அவனை மாதிரி ஹேர் ஸ்டைல் வச்சிக்கிட்டு வந்தாலோ அதை பார்த்து சிம்பு சந்தோஷப்படுவான். அந்த நல்ல மனசுதான் அவனை பெரிய ஆளாக்குனுச்சு” என கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் அவரே சிம்பு மாதிரி மெமிக்ரி செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இதையும் படிங்க: வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுண்டமணி… விஜயகாந்த் செய்த துணிகர காரியம்… என்ன நடந்தது தெரியுமா?

Published by
Rajkumar