Connect with us

Gossips

தலையை கொடுத்த இயக்குநர்!.. அடுத்த ஆடு வான்டட்டா வந்து மாட்டியதை பார்த்து சத்தமா சிரிச்சிட்டாராம்!

ஏற்கனவே அந்த நடிகர் படங்களை இயக்கிய இயக்குநர்கள் எல்லாம் அடுத்த படத்தை எடுக்க முடியாமல் பல வருஷங்களாக திண்டாடி வருகின்றனர். பிரபல நடிகையின் கணவரை புக் செய்து விட்டு கடைசி நேரத்தில் நடிகையை ஹீரோயினாக்க முடியாது என்கிற பஞ்சாயத்து காரணமாக இயக்குநரையும் சேர்த்து மாத்தி விட்டார்.

அவரும் அவரது மனைவியும் விட்ட சாபமா என்னவோ தெரியவில்லை. இன்னமும் அந்த படம் விளங்காமலே வேலையை காட்டி வருகிறது. அண்ணன் எப்போ போவான் திண்ண எப்ப காலியாகும் என நடிகையின் கணவரை கழுத்தை பிடித்து தள்ளியதும் கெத்தாக காலரை தூக்கிப் போட்டு கமிட் ஆகும் போது அந்த இயக்குநருக்கு உள்ளே இருக்கும் சிக்கல்கள் எதுவும் தெரியவில்லை.

இதையும் படிங்க: 2024-ல் ஒரு ஹிட் கூட இல்லை!.. இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!..

அந்த நடிகரை வைத்து அட்டகாசமாக படத்தை எடுத்து விடலாம் என நினைத்த இயக்குநருக்கு ஆரம்பத்தில் இருந்து நடிகர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் படத்தை அவர் நினைத்ததை போல இன்னமும் எடுக்க முடியாமல் தவித்து ஒரே கிணற்றில் விழுந்த தவளையாக தத்தளித்து வருகிறாராம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சமீபத்தில் அவர் விழுந்து விழுந்து திடீரென சிரித்ததை பார்த்து உதவி இயக்குநர்களே ஷாக் ஆகி விட்டதாக கூறுகின்றனர். அதற்கு காரணம் விரைவில் தான் ரிலீஸ் ஆகி விடுவேன் என்றும் அடுத்த ஆடு வசமாக சிக்கியிருக்கு அடுத்து அவரை வச்சு எப்படியெல்லாம் செய்யப் போகிறார் அந்த நடிகர் என்பதை நினைத்து தான் சிரித்துள்ளார் என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க:  தப்பான விஷயத்துக்கா க்ளாப் தட்டுனோம்!… தப்பாச்சே… இதை நீங்க கவனிச்சீங்களா?

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top