×

ஆமா! தளபதி 66 படத்துக்கு நான்தான் இயக்குனர் - உறுதி செய்த இயக்குனர்

 
vijay

நடிகர் விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். பெயர் வைக்கப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோலமாவு கோகிலா,டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் சில நாட்கள் நடைபெற்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பின் விஜயின் 66வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

vamsi

இந்த படத்திற்கு பின் விஜய் ஒரு பேன் இண்டியா படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது, விஜய் இதுவரை தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்திருக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தனது 67வது படத்தில் நடிப்பதாகவும், இப்படத்தை நாகார்ஜுனா- கார்த்தி ஆகியோரை வைத்து 'தோழா’ படத்தின் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் எனவும் எனக்கூறப்பட்டது. இப்படம் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது எனவும், இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது இந்த தகவலை இயக்குனர் வம்சி உறுதி செய்துள்ளார். ஆனால், தற்போது விஜய் நடித்து வரும் படம் முடிந்தவுடன், அவரின் 66வது படத்தைத்தான் அவர் இயக்கவுள்ளார்.  சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ஆமாம். விஜயின் 66வது படத்தை நான்தான் இயக்கவுள்ளேன். ஊரடங்கு முடிந்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News