Categories: Cinema News latest news throwback stories

சுஜாதாவை சைட் அடிப்பதற்காக இயக்குனர் செய்த முயற்சி! செமயா இருக்கே!

தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அவர்களுடைய முதல் படம் முக்கியமான படம் எனக் கூறலாம். முதல் படம் மக்களிடையே கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

அப்படி இளையராஜா முதன்முதலாக இசையமைத்த படம் அன்னக்கிளி. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதே சமயம் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சுஜாதாவிற்கும் அது ஒரு முக்கியமான படமாக அமைந்துவிட்டது.

actress sujatha

அந்த சமயத்தில் சுஜாதாவின் மீது ஈர்ப்பு கொண்டு அலைந்த இளைஞர்கள் பலர் இருந்தனர். சினிமா பிரபலங்கள் கூட அவருடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இதனால் அதிக பட வாய்ப்புகள் பெற்று வந்தார் சுஜாதா.

வேலு பிரபாகரன் செய்த வேலை:

இந்த நிலையில் இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு நடிகை சுஜாதா மீது அதிகமான ஈர்ப்பு இருந்தது. 1984 ஆம் ஆண்டு நடிகை சுஜாதா நடிப்பில் பெருமை என்கிற திரைப்படம் தயாரானது. அந்த திரைப்படத்தின் கேமிராமேன், இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு தெரிந்தவராக இருந்தார்.

director velu prabhakaran

மூன்று நாள் வெளியில் செல்ல இருந்ததால் அந்த வேலையை பார்த்துக் கொள்ளுமாறு அவர் வேலு பிரபாகரனிடம் கூறி இருந்தார்.அவரும் சரி சுஜாதாவை நேரில் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது இருக்கும் என்று அந்த படபிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு வேலு பிரபாகரன்  சிறப்பாக வேலை பார்த்ததை பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்டார் நடிகை சுஜாதா. பழைய கேமிரா மேன் வேண்டாம். தினமும் நீங்களே வந்து படப்பிடிப்பை எடுங்களேன் என்று அவரிடமே கேட்டுள்ளார் சுஜாதா. இந்த விஷயத்தை வேலு பிரபாகரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Published by
Rajkumar