Thamizh Murugan: மீண்டும் நாவலை கையிலெடுக்கும் வெற்றிமாறன்!.. தனுஷ் பட அப்டேட்!...
தனுசை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றி மாறன். தனுசும் வெற்றிமாறனும் இணைந்து உருவாக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக அமைந்தது. அதோடு, தனுசுக்கு 2 தேசிய விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
தற்போது வெற்றிமாறன் சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார். இது ஏற்கனவே அவர் இயக்கிய வடசென்னை படத்தின் கிளை கதையாக உருவாகி வருகிறது. இந்நிலையில்தான் தனுசுடன் மீண்டும் வெற்றிமாறன் இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு தமிழ் முருகன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தனுஷ் வெளியிட்டார். இந்த படத்தின் கதையை கவிஞர் அறிவுமதி எழுதியிருக்கிறார்.
இந்நிலையில்தான், இது கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் நாவல் என்பது தெரிய வந்திருக்கிறது. அதை சினிமாவுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி வெற்றி மாறன் படத்தை இயக்கவிருக்கிறார் என்பதை தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு ஆட்டோ ஓட்டுனர் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை படத்தை வெற்றிமாறன் இயக்கினார். அதேபோல் பூமணி எழுதிய வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக வைத்து அசுரன் படத்தை எடுத்தார்.
இந்நிலையில்தான் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். அரசன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தமிழ் முருகன் படத்தின் ஷூட்டிங் துவங்கும் என சொல்லப்படுகிறது..
