
Cinema News
சோத்துக்கே வழி இல்லாம மயங்கி விழுந்தேன்!.. வெற்றிமாறனுக்கு இப்படி ஒரு சோகமா?!…
Published on
By
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் சமூகத்திற்கு ஏதாவது ஒரு புதிய செய்தியை, ஒரு வாழ்க்கைமுறையை வெற்றிமாறன் காட்டுவார்.
பொல்லாதவன் படத்தில் பைக் திருட்டுக்கு பின்னால் இருக்கும் பல விஷயங்களை காட்டியிருப்பார். ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை குறித்து பல விஷயங்களை பேசி இருப்பார். இதனால் தொடர்ந்து வெற்றிமாறன் திரைப்படங்கள் மீது மக்களுக்கு இருக்கும் வரவேற்பானது அதிகரித்து வருகிறது.
தற்சமயம் வெளியான விடுதலை திரைப்படமும் கூட நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இவர் படம் இயக்க போவதாகவும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன.
சில காலங்களுக்கு முன்பு வெற்றிமாறன் தனது அலுவலகத்திற்காக ஒரு இடத்தை வாங்கினார். ஆனால் அந்த இடத்தின் உரிமையாளர் இடத்தின் விலையை விடவும் அதிக தொகையை கூறியுள்ளார்.
இடத்திற்கு பின்னால் உள்ள கதை:
ஆனாலும் வெற்றிமாறன் அந்த இடத்தை வாங்கியே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்து இடத்தை வாங்கியுள்ளார். இதனால் வெற்றிமாறனின் மனைவிக்கு அவரது மீது கோபம் வந்துள்ளது. எனவே தனது கணவரிடம் இதுக்குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு வெற்றிமாறன் பதிலளிக்கும்போது நான் வாங்கியிருக்கும் இடத்திற்கு எதிரில் ஒரு ஆபிஸ் உள்ளது. ஒருவேளை சோறு கூட இல்லாமல் அங்கு ஒரு சான்ஸ் கிடைக்காதா என வரிசையில் நின்றிருக்கிறேன். பலமுறை மயக்கம் போட்டும் விழுந்திருக்கிறேன்.
இப்போது இவ்வளவு பெரிய இடத்தை அடைந்துள்ளேன். ஆனால் எவ்வளவு உயரம் வந்தாலும் பழசை மறக்க கூடாது. அப்போதுதான் வாழ்க்கையில் சிறப்பாக இயங்க முடியும். அதனால்தான் அந்த அலுவலகத்திற்கு எதிரிலேயே நமது அலுவலகத்தை வாங்கியுள்ளேன். என மனைவிக்கு புத்திமதி கூறியுள்ளார் வெற்றிமாறன்.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....