×

தெறிக்கும் வசனங்களை எழுதிய இயக்குனர் விஜயகுமார்… ஆனாலும் சூர்யா படக்குழு கண்டுகொள்ளவில்லையாம்!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ள உறியடி இயக்குனர் விஜய்க்குமாருக்கு படக்குழுவினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

 

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ள உறியடி இயக்குனர் விஜய்க்குமாருக்கு படக்குழுவினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தபடத்தின் டிரைலர், சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள ’வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா ‘ போன்ற வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளன.

படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களை உறியடி 1 மற்றும் உறியடி 2 ஆகிய படங்களின் இயக்குனர் விஜய்குமார்தான் எழுதியுள்ளாராம். ஆனால் படக்குழு தனக்கு உரிய மரியாதை தரவில்லை என விஜய்குமார் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.  படத்தில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லோரையும் பாராட்டி வரும் சூர்யா கூட விஜயகுமாரின் வசனங்களைப் பற்றி எதுவும் கூறுவதில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News