×

இயக்குனர்களும், துணை இயக்குனர்களும் 
புதுமுகங்களில் திருமுகம் யாரோ...?

இயக்குனர்களும், துணை இயக்குனர்களும் பற்றிய கட்டுரை
 
Director Shankar
தமிழ்சினிமாவில் குரு மற்றும் சீடர் பரம்பரை உறவுகள் நிறையவே உள்ளது. இயக்குனர் இமயம் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகன், கதாநாயகிகள் ஏராளம். அவரது மோதிர விரலால் குட்டுப்பட வேண்டுமே என்று காத்திருப்பவர்களும் ஏராளம். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் ரஜினிகாந்த். 

சினிமாவில் உச்சத்தை அடைந்தவரும் இவர்தான். ஆனால், கமல்ஹாசனை அறிமுகப்படுத்தவில்லை. என்றாலும,; பல வெற்றிப்பட வாய்ப்புகளை அவருக்கு அமைத்துக் கொடுத்தவர் பாலசந்தர்தான். 

    இவர்களில் இயக்குனரானது கமல்ஹாசன் தான். கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் ஏராளம். ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெயலட்சுமி, ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ், சிவசந்திரன், சுஜாதா, ஷோபா, சரத்பாபு, சரிதா, பிரகாஷ்ராஜ், திலீப், அனுமந்து, எஸ்.வி.சேகர்;, மௌலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி இராமமூர்த்தி, மேஜர் சுந்தரரஜன், ராதாரவி. 

    இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள் ரவிச்சந்திரன், காஞ்சனா, ஸ்ரீகாந்த், ஜெ.ஜெயலலிதா, நிர்மலா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி. இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனர்கள் பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, என்.சக்கரவர்த்தி, பி.வாசு, சந்தான பாரதி, ராஜ்கபூர். 
   
    இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அட்லி குமார். இவர் இயக்கிய படம் தான் ராஜா ராணி. அந்தகாரம், பிகில் படங்களையும் இயக்கியரும் இவரே. நாட்டாமை படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சேரன். ஆட்டோகிராப், ராஜாவுக்கு செக், திருமணம் (சில திருத்தங்களுடன்) மற்றும் பாரதி கண்ணம்மா படத்தை இயக்கினார். 

இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர்களாக கே.பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லெட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் பணிபுரிந்துள்ளனனர். இவர்களில் கே.பாக்கியராஜ் இது நம்ம ஆளு, எங்க சின்ன ராசா, முந்தானை முடிச்சு போன்ற வெற்றி படங்களை இயக்கினார். 

கே.பாக்கியராஜின் உதவி இயக்குனர்களாக பாண்டியராஜன், பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் மற்றும் ஜி.எம்.குமார் ஆகியோர் பணியாற்றினர். பின்னர் இவர்கள் அனைவரும் வெற்றிகரமான இயக்குனர்களானார்கள். இவர்களில் பாண்டியராஜன் ஆண்பாவம், கன்னிராசி, மனைவி ரெடி, நெத்தி அடி போன்ற படங்களை இயக்கினார். பார்த்திபன் ஒத்த செருப்பு, கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை, வசனம், இயக்கம், அழகி ஆகிய படங்களை இயக்கினார். தற்போது பார்த்திபன் தனது பெயரை இராதாகிருஷ்ணன் பார்;த்திபன் என்று மாற்றியுள்ளார். 

    வி.சேகர் விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோ பொங்கல், பொறந்தவீடா, புகுந்த வீடா ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெறறறார். என் புருஷன் குழந்தை மாதிரி, சுந்தர புருஷன், வயசு பசங்க ஆகிய படங்களை இயக்கினார். ஜி.எம்.குமார் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய படங்களை இயக்கினார்.

    இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கமல் நடித்;த விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் அக்ஷராஹாசன். கமலிடம் பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்தவர் ராஜேஷ் எம்.செல்வா தூங்காவனம் படத்தை இயக்கினார். தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்தில் தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுமாம்...! பாய்ந்துள்ளதா என்பது உங்களுக்கே வெளிச்சம்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News