×

மிஷ்கின் பிறந்தநாளை ஒன்று கூடி கொண்டாடிய இயக்குனர்கள்!

கௌதம்மேனன், ஷங்கர், மணிரத்னம் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்

 
mysskin

தமிழ் சினிமா கண்டெடுத்த மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , நந்தலாலா , சவரகத்தி என விரல்விட்டு என்ன கூடிய அளவிற்கு ஒரு சில படங்களே இயக்கியிருந்தாலும். வித்யாசமான கதை மூலம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிய மிஷ்கினுக்கு சக இயக்குனர்களான ஷங்கர், கௌதம்மேனன், சசி, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், மணிரத்னம் , பாடகர் கார்த்தி என பலரும் ஒன்றுகூடி கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News