×

பீர் வாங்கித் தர சொல்லி நண்பனிடம் தகராறு – திருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு!

நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக எம் பி திருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக எம் பி திருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. இவருக்கு சூர்யா என்றொரு மகன் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா தனியாக சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் இவருடைய நண்பரான ஸ்ரீராம் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு வந்த சூர்யா தனக்கு 4 பீர்கள் வாங்கித் தர சொன்னதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஸ்ரீராமுக்கும் சூர்யாவுக்கும் தகராறு ஏற்பட்டு அங்கு கைகலப்பு வரை சென்றுள்ளது.

ஸ்ரீராம் அவசர உதவி எண்ணான 100 க்கு அழைத்து புகார் செய்துள்ளார். அதே போல சூர்யாவும் ஸ்ரீராம் மேல் புகார் செய்துள்ளார். இரு புகார்களையும் பெற்றுக்கொண்ட தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News