தன் மடி நிறைஞ்சா போதும்னு நினைக்கிறவர் ரஜினி.. கமல் அப்படி இல்ல.. என்ன இப்படி சொல்லிட்டாரு
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். 80களில் இருந்து இன்று வரை அதே பேருடனும் புகழுடனும் ரசிகர்களின் நெஞ்சங்களில் சிறந்த நடிகர்களாக ஜொலித்துக் கொண்டு வருகின்றனர். இருவருமே தொழில் ரீதியாக போட்டியாளர்களாக இருந்தாலும் மனதளவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர்.
இவர்களின் அந்த அழகான நட்பு மேடையில் இவர்கள் ஒன்றிணைந்து தோன்றும் போது வெளிப்படும். ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். இருவருமே பாலசந்தர் என்ற அழகான பள்ளியில் இருந்து வந்தவர்கள். அவரால் அறிமுகப்படுத்தவர்கள்தான் ரஜினியும் கமலும். இதில் ரஜினி இன்றுவரை இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராக இருந்து வருகிறார்.
கமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அரசியலிலும் அவருடைய ஆர்வம் இருந்து வருகிறது. நடிப்பில் கமலை விட ரஜினி ஜூனியர் என்றாலும் இப்போது ரஜினிதான் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார். கமல் ஏஐ தொழில் நுட்பம் படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். கமலை பொறுத்தவரைக்கும் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பவர்.
அதனால் ரஜினி கமலை பற்றி பிரபல தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான கே. ஆர் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். ரஜினி ஒரு சுயநலவாதி. கமல் பொதுநலவாதி என்று கூறியிருந்தார். ஏனெனில் ரஜினியை பொறுத்தவரைக்கும் தான் மட்டும் நல்லா இருக்கனும். தன் படம் நல்லபடியாக ஓடனும், வெற்றியடையனும், தன்னுடைய சம்பளம் கரெக்டா வந்துரனும், தன்னை சுற்றி இருக்கிறவர்கள் லாபம் பார்க்க வேண்டும் என்று மட்டும் நினைப்பவராம்.
ஆனால் கமல் அப்படி இல்லை. சினிமாவிற்காக புது புது எக்ஸிபிரிமெண்ட் செய்து கொண்டே இருப்பார். அடுத்த கட்ட நிலைக்கு சினிமாவை எடுத்துச்செல்ல வேண்டும் என நினைப்பார். சினிமாவில் இருந்து வரும் காசை சினிமாவிற்குள்தான் போடுவார் கமல் என கே. ஆர் கூறினார்.