Connect with us

Cinema News

சினிமாவுக்கு எண்ட் கார்டு போடாதீங்க!.. பெரிய மாலை போட்டு விஜய்யிடம் கோரிக்கை வைத்த பிரபலம்!..

கோட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துவரும் நிலையில் அவரை சந்தித்த பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் பெரிய மாலை ஒன்றை வாங்கிச் சென்று தளபதி விஜய் கழுத்தில் அணிவிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

விஜய்க்கு மாலையை அணிவித்த உடன் சார் ஒரு கோரிக்கையை ஒட்டுமொத்த ரசிகர்களின் கோரிக்கையை சக்திவேலன் விஜயிடம் வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விஜய் தூக்கத்தை கெடுக்க முடிவு கட்டிய ரஜினிகாந்த்?.. 300 கோடி, 1100 கோடின்னு எகிறுதே!..

தமிழ் சினிமா இந்த ஆண்டு நான்கு மாதங்களாக டல் அடித்து வரும் நிலையில், கடந்த வாரம் தியேட்டரில் வெளியான கில்லி ரிலீஸ் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சக்திவேலன் நடிகர் விஜயை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், சினேகா, லைலா, மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் ரிலீஸ் பிசினஸ் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையும் படிங்க: திருமணமாகி 24 வருடம்!.. அஜித்துடன் செம ரொமான்ஸ் பண்ணும் ஷாலினி!.. இது செம பிக்!..

அடுத்ததாக தளபதி 69 படத்துடன் நடிகர் விஜய் சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அப்படி எல்லாம் உடனடியாக சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்து விடாதீர்கள்.

ரசிகர்கள் உங்களை பார்க்கத்தான் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். வருஷத்துக்கு ஒரு படமாவது ரசிகர்களுக்காக கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தற்போது சக்திவேலன் நடிகர் விஜய்யிடம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: நவரச நாயகன் கார்த்திக் நடித்த வெள்ளி விழா படங்கள்… இவருக்கு மாதிரி யாருக்கும் அமையல!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top