×

திருமணமான 1 ஆண்டில் விவாகரத்து.. கசந்து போன நடிகையின் காதல் வாழ்க்கை!

பிரபல தொலைக்காட்சி நடிகை மேக்னா வின்சென்ட் தனது கணவருடன் விவாகரத்து செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பொன்மகள் வந்தால், தெய்வம் தந்த வீடு போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். 

 

இவர் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது காதலரான டான் டோனியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பிரமாண்டமாக ஒரு தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்களும் தொலைக்காட்சி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளிவந்தது.

அதனை உறுதியாக்கும் வகையில் நடிகை மேக்னா மற்றும் கணவர் டான் டோனியும் முறையாக விவாகரத்து பெற்று உள்ளனர் என்று இந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் கணவர் டான் டோனி  மறுமணத்திற்காக தயாராகி வருவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. ஓராண்டுக்குள் முடிந்த நடிகையின் திருமண வாழ்வு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News