Categories: Cinema News latest news

எத்தனை பேர் பண்ணாலும் உன்ன மாதிரி வருமா!.. அரபிக்குத்துக்கு டிடி போட்ட செம டான்ஸ்…

தற்போது பல இடங்களிலும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து காய்ச்சல் பரவி வருகிறது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

யுடியூப்பில் வீடியோ வெளியாகி 4 நாட்களில் சுமார் 5 கோடி பேருக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். அதோடு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: உனக்கு ஜில்லுன்னு இருக்கு… எங்களுக்கு சூடாகுது!…அசர வைத்த சமந்தா…

 

ஏற்கனவே பூஜா ஹெக்டே இந்த பாட்டுக்கு மாலத்தீவில் நடனமாடி வீடியோ வெளியிட்டுருந்தார். அதேபோல், நடிகை சமந்தா இதுபோன்ற வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ செம வைரலானது.

இந்நிலையில், அரபிக்குத்து பாடலுக்கு டிவி தொகுப்பாளினியான டிடி நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘எத்தனை பேர் பண்ணாலும் உன்ன மாதிரி வருமா!’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

 

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா