கவுத்திபுட்டாளே! தர்பூஸ் மாமா ஜூஸ் ஆன தருணம்.. அதுக்குள்ள பிரேக்கப்பா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது ஒன்பதாவது சீசனில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்து ஒரு வாரம் ஆன நிலையில் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் திடீரென நந்தினி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.
ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் விக்ரம், அரோரா, விஜே பார்வதி, திவாகர், நந்தினி, வியானா, பிரவீன் காந்தி என பல பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். ஏழு சீசன்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில் எட்டாவது சீசனில் இருந்து விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியி பிக்பாஸ் வீடே ஒரு அரண்மனை போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக்பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் வியானா, பிரவீன் காந்தி, ஆதிரை, அப்சரா, பிரவீன் ராஜா, திவாகர், கலையரசன் அதிக வாக்குகள் பெற்று நாமினேஷனில் உள்ளே வந்தனர். அதுமட்டுமில்லாமல் வழக்கம் போல ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீடு சண்டையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வார தலைவராக தூஷார் வெற்றி பெற்றார்.
முதல் போட்டியாளராக உள்ளே வந்து அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தவர் திவாகர். இவர் பண்ண அலப்பறைகள் எல்லாருக்குமே தெரியும். இன்னும் 100 நாள்கள் திவாகரின் அட்ராசிட்டியை பார்க்கணுமா என்றும் ரசிகர்கள் நொந்து போயினர். ஆனால் இப்போது ஃபுல் எண்டெர்டெயின்மெண்டே திவாகர்தான் என்பது போல ஆகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் திவாகர் அரோரா கெமிஸ்ட்ரி வேறலெவலில் இருந்தது.
பார்க்க காமெடியாக இருந்தாலும் அரோராவை திவாகர் வர்ணிப்பது கொஞ்சம் காமெடியாக இருந்தன. ஆனால் இப்போது அரோரா துஷார் பக்கம் திரும்பியிருக்கிறார். துஷாரை ஆரம்பத்தில் தம்பி தம்பி என அழைத்து வந்த அரோரா இப்போது துஷாராவுடன் குளோசாக இருக்கிறார். இதனால் திவாகருக்கு நெஞ்சே வெடித்து விட்டது. ஏற்கனவே கர்ணன் சிவாஜி போல நடித்து காட்டிய திவாகரின் நெஞ்சம் உண்மையிலேயே வெடித்துதான் போயிருக்கும். இதை மீம் டெம்ப்ளேட்டாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர்.
🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/d9yRCbq4Wy
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 12, 2025