Categories: Cinema News latest news

தலைகீழாக தான் குதிப்பேன்!… தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம்… இப்போ இந்த விபரீத முயற்சி தேவையா?

Diwali Release: தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் பலரும் விடுமுறை தினத்தினை குறி வைத்து தான் படங்களை ரிலீஸ் செய்வார்கள். அதனால் போட்டிகள் அன்று நிறைய இருக்கும். இதனால் வசூலும் படத்துக்கு கணிசமாக கிடைக்கும்.

விஜய் நடிப்பில் லியோ படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாக இருக்கிறது. நீண்ட விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் பெருமளவில் இருக்கும் என படக்குழு ஐடியா செய்தே தொடர்ச்சியாக ப்ரோமோஷன்களையும் தொடங்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க:என்ன பார்த்தா அப்படியா தெரியுது!.. மார்க் ஆண்டனி டைரக்டரை கிட்டவே சேர்க்கல.. எஸ்.ஜே. சூர்யா பேச்சு!..

லியோ படத்தின் ரிலீஸால் கிடைக்கும் சொற்ப வருமானம் போய் விடும் என்ற பீதியில் கிட்டத்தட்ட 30 படங்கள் செப்டம்பர் மாதமே ரிலீஸாக இருக்கிறது. இருந்தும் லியோ படத்துடன் போட்டியில் சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த பெரிய விடுமுறை தினமான தீபாவளி தினத்தில் துருவ நட்சத்திரத்தினை வெளியிட படக்குழு ப்ளான் செய்து இருக்கிறது. இரண்டு பாகமாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தினை நவம்பர் தீபாவளி தினத்தில் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நிறுத்து! நிறுத்து!! இந்த தில்லாங்கடி வேலைலாம் வேணாம்… வதந்திக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன த்ரிஷா!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு தொடங்கிய படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அப்படியே பொட்டியில் முடங்கியது. ஆனால் சில மாதங்கள் முன்னர் தூசு தட்டப்பட்டு மீதம் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இருவேறு கெட்டப்பில் விக்ரம் நடிக்கும் இப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily