ரசிகர்கள் வரவேற்பு இல்லாததால் ரத்து செய்யப்பட்ட காலை 6 மணி காட்சிகள்!.. திரையரங்குகளில் ஏமாற்றம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகளை நடத்த தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது
 
theaters

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகளை நடத்த தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால், அனுமதிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே காலை 6 மணி சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். குறிப்பாக முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு அதிகாலையிலேயே திரள்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடித்த  சீன் , நயன்தாராவின்  மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. பண்டிகைக் கால கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் காலை 6 மணி முதல் சிறப்புக் காட்சிகளைத் திரையிடுவதற்கு ஒரு வார காலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி விடுமுறை நாட்களில்கூட அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக காலை 6 மணி காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டாததால், திரையரங்கு நிர்வாகங்கள் அந்தக் காட்சிகளைத் தொடர்ந்து நடத்துவதில் தயக்கம் காட்டியுள்ளன.

இதன் காரணமாக, அரசு வழங்கிய ஒரு வார அனுமதிக் காலம் முடிவதற்கு முன்பே காலை 6 மணி சிறப்புக் காட்சிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் தீபாவளி விடுமுறையால் சில திரைப்படங்களின் வசூல் அதிகரித்தாலும், மறுபுறம் அதிகாலை காட்சிகளுக்குப் போதிய ரசிகர்கள் வராதது திரையரங்கு வட்டாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு சிலரோ விஜய், ரஜினி, அஜித் ஆகிய நடிஅக்ர்களுக்கு மட்டுமே அதிகாலை காட்சியில் ஓரளவிற்காவது ரசிகர்கள் வருவார்கள். மற்ற நடிகர்களுக்கு அவ்வாறு எதிர்பார்ப்பது தவறு என்றும் கூறுகின்றனர். 

அதே சமயம் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அதிகாலை காட்சிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய காலம் மாறி வருகிறதா என்ற கேள்வியையும்  எழுப்பியுள்ளது.

Tags

From Around the web