×

தனி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் - மீண்டும் திமுகவில் சலசலப்பு

 

திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என அறிவித்து வருவது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

திமுக தங்களோடு கூட்டணியில் இணையும் சிறிய கட்சிகளை தங்களின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருவது தொடர்கதையாகி விட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வற்புறுத்தியது. தொடக்கத்தில் அதை வைகோ எதிர்த்தாலும் வேறு வழியின்றி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.  அதேபோல், விழுப்புரத்தில்   விடுதலை சிறுத்தை கட்சியும் திமுக சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட மறுத்து, தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தது. எனவே, திமுக சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளை நிர்பந்திக்க மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.    

இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த ஓ.வை.சி கட்சியை திமுக பொதுக்கூடத்திற்கு திமுக அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதை திமுக ஏற்கவில்லை எனில் அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் எனவும் அறிவித்துள்ளது. எனவே, திமுக கூட்டணியில் தனிச்சின்னம் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. தங்கள் கேட்கும் தொகுதிகளை பெறவே தனிச்சின்னத்தில் போட்டியிட திமுக கூட்டணி கட்சிகள் கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் 200 போட்டிகளில் வெற்றி என்கிற இலக்கு சிதறிவிடுமோ என திமுக கருதுகிறது. எனவே, திமுகவில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News