×

வாரிசு அரசியலில் உச்சம் தொட்ட திமுக... கொதிக்கும் உடன்பிறப்புகள்

திமுக வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சி விசுவாசிகள் கொதிக்கிறார்கள். 
 
வாரிசு அரசியலில் உச்சம் தொட்ட திமுக... கொதிக்கும் உடன்பிறப்புகள்

தி.மு.க சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 173 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே நிலவி வந்தது. ஆனால், இதற்கு மாறாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்களின் வாரிசுகள் 21 பேருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

இதனால், உண்மையாகக் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு வாய்ப்புத் தரவில்லை என சலசலப்பு உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதில், 16 பேர் ஏற்கனவே பொறுப்பில் இருப்பவர்களின் வாரிசுகள், 5 பேர் பொறுப்பில் இருந்தவர்களின் குடும்ப வாரிசுகள். கருணாநிதி காலத்தில் இருந்து தி.மு.கவின் மாவட்ட செயலாளர்கள் அந்த பகுதியின் குறுநில மன்னர்களாகச் செயல்பட்டு வந்தனர். அது ஸ்டாலின் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுகவில் இதை முறியடிக்க முடியாதது ஸ்டாலினின் பலவீனத்தையே காட்டுகிறது. இந்த பலவீனம் சட்ட பேரவைத் தேர்தலிலும் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

உதயநிதிக்கு வாய்ப்பு அளித்துள்ளதன் மூலம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியை கருணாநிதி குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விடுவதாக தி.மு.க தொண்டர்கள் விமர்சனம் செய்கின்றனர். உதயநிதிக்கு வாய்ப்பு கொடுப்பதால்  தி.மு.கவின் மற்ற தலைவர்களின் வாரிசுகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தி.மு.க விசுவாசிகள் கவலையோடு பேசிக்கொள்கிறார்கள். 


இந்தநிலையில், இந்தியா டுடே டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி துண்டுச் சீட்டு எதுவும் இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என்று கூறியிருந்தார். இதுகுறித்து அந்த கருந்தரங்கில் கலந்துகொள்ளும் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும் என இந்தியா டுடே டிவி ஆசிரியர் ராகுல் கன்வால் கூறியிருந்தார். 

From around the web

Trending Videos

Tamilnadu News