×

ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுவதா? சர்ச்சையில் திமுக வேட்பாளர் 

``மணல் திருட்டைத் தடுக்கும் அதிகாரிகளை இடம் மாற்றுவோம்" என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுவதா? சர்ச்சையில் திமுக வேட்பாளர்

ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போதே மணல் திருட்டு குறித்தும், அதிகாரிகளை மாற்றுவது குறித்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசியிருப்பது பெரும் விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது. 


கரூரில் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி,``ஸ்டாலின் முதல்வரான அடுத்த 5 நிமிடங்களில் மாட்டுவண்டியை ஆற்றுக்கு விடுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள், அப்படி தடுத்தால் எனக்கு போன் போடுங்கள். அந்த அதிகாரி அங்கு இருக்கமாட்டான்" என ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுகிறார்.

மனல் திருட்டை எந்த அதிகாரியாவது தடுக்க நினைத்தால், அவர்கள் உடனே இடம் மாற்றப்படுவார்கள் என கூறுகிறார் செந்தில் பாலாஜி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `அப்போ மணல் திருட்டை ஆதரிக்கிறீர்களா மிஸ்டர் செந்தில் பாலாஜி’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 

ஆட்சிக்கு வரும் முன்பே இப்படியா? ஆட்சிக்கு வந்தா என்னவெல்லாம் நடக்கும்?

From around the web

Trending Videos

Tamilnadu News