×

குற்றப்பிண்ணனி கொண்ட வேட்பாளர்கள் - முதலிடத்தில் திமுக

 
குற்றப்பிண்ணனி கொண்ட வேட்பாளர்கள் - முதலிடத்தில் திமுக

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரதில் ஈடுபட்டுள்ளன. நாளை மாலை பிரச்சாரம் முடிவடையவுள்ளது. 

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றபின்னணி உடையவர்களை கணக்கெடுத்தால் அதில் திமுக வேட்பாளர்கள் முதலிட்டத்தில் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் (Association for Democratic Reforms)தெரியவந்துள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் 136 வேட்பாளர்கள் மீது அறிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், 50 பேர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளது. திமுக வேட்பாளர்களில் 76 சதவீதம் பேர் குற்றப்பிண்ணனி உடையவர்களாக இருப்பதும், 26 சதவீதம் பேர் மிக கடுமையான குற்றச்சாட்டுக்களை உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதேநேரம் மாநிலத்திலேயே மிகவும் குறைந்த குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 41 பேர் மட்டுமே குற்ற பின்னணி உடையவர்களாக உள்ளனர்.

சொத்து மதிப்புகளை பொறுத்தவரை, திமுகவின் 178 வேட்பாளர்களில் 155 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் 21 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர். தமிழகத்தில் அதிக கோடீஸ்வர வேட்பாளர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News