×

அதிமுகவை நிராகரிக்கிறோம்! - அம்பலமான திமுகவின் தில்லாலங்கடி வேலை...

 

எதிர்கட்சியான திமுக சில நாட்களுக்கு முன்பு ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற பரப்புரையை துவங்கியது. werejectadmk என்கிற இணையதளமும் உருவாக்கப்பட்டு அதில் லட்சக்கணக்கானோர் கிளிக் செய்துள்ளதாக திமுக கூறுகிறது. மேலும், அதிமுகவை நிராகரித்தோர் எண்ணிக்கையும், நிராகரித்த கிராமங்களின் எண்ணிக்கையும் அந்த இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இணையதளத்தில் ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் போதும் (Refresh) 5 எண்ணிக்கை கூடிக்கொண்டே  போகிறது. ஒரு நிமிடத்திற்கு 20 முதல் 40 எண்ணிக்கை உயர்கிறது. ஆனால், அதை மக்களின் எதிர்ப்பு என திமுக பரப்புரை செய்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இரவிலும் கூட எண்ணிக்கை அதுவாக அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். எனவே, தங்களுக்கு ஏற்றவாறு ஒரு மென்பொருளை உருவாக்கி திமுக போலியான தகவல்களை தெரிவித்து மக்களை ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது. இதன் பின் ஐ பேக் நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது. 

eps

ஏனெனில் பிரசாந்த் கிஷோர் வசிக்கும் மாநிலமான பிகாரில் இந்த இணையதளம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒரு கட்சிக்கு ஏன் பீகாரில் இணையதளம் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற சந்தேகம் அதை உறுதி செய்கிறது.

தற்போதுள்ள நவீன மென்பொருட்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் வேலையை திமுக செய்து வருகிறது. இதற்காக தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை எதிர்க்க வலிமை இல்லாமல் குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க திமுக செய்யும் நரித்தந்திரமாக இந்த செயல் பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே ‘எல்லோரும் நம்முடன்’ என்கிற  தலைப்பில் திமுக இணைய வழியில் ஆள் சேர்ப்பு செய்ய எடுத்த முயற்சி மக்களிடம் எடுபடவில்லை. அதில் கூட திமுகவினர் மட்டுமே பதிவு செய்தனர். எனவே, இதுபோன்ற வேலையை திமுக செய்து வருகிறது.

post

From around the web

Trending Videos

Tamilnadu News